10,200 பேருக்கு வேலை அரசு அனுமதி தர தாமதம்
சென்னை: தமிழக மின் வாரியத்தில் கள பிரிவில் 40 ஆயிரம் பணியிடம் உட்பட மொத்தம் 54 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. உதவி பொறியாளர் உட்பட அனைத்து பதவிகளுக்கும் மின் வாரியமே நேரடியாக தேர்வு நடத்தி ஆட்களை தேர்வு செய்தது.
கடந்த 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் 'பொதுத்துறை நிறுவனங்களுக்கான பணியாளர்கள் அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்' என தமிழக அரசு அறிவித்தது.
கள பிரிவு ஊழியர்களை மின் வாரியம் நியமிக்க அரசு அனுமதி அளித்தது. எனவே கள பிரிவில் 10 ஆயிரத்து 200 பேரை தேர்வு செய்ய 2022 ஆகஸ்டில் தமிழக அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது.
ஒன்பது மாதங்களாகியும் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் காலி பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. விரைவில் 10,200 பேருக்கு வேலை அரசு அனுமதி தர தாமதம்
ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் என்பது ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!