உலக தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் பணிக்கு வாய்ப்பு
சென்னை: சென்னை, தரமணியில் செயல்பட்டு வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், கடந்த ஏழு மாதங்களாக இயக்குனர் பணியிடம் நிரப்பப்படவில்லை. இதனால், ஆய்வு, பதிப்பு, அறக்கட்டளை சொற்பொழிவு உள்ளிட்ட கல்வியியல் சார்ந்த பணிகள் தடைபட்டன.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், நிரந்தர இயக்குனர் பணியிடத்தை நிரப்ப, அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
நேரடி நியமனமான இந்த பணியிடத்திற்கான தகுதிகள்:
முதல் வகுப்பு முதுகலைப் பட்டத்துடன், பிஎச்.டி.,யும் முடித்திருக்க வேண்டும். ஐந்தாண்டு இணை பேராசிரியர் பணியுடன், கற்பித்தலிலும், ஆராய்ச்சிப் பணியிலும், 10 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விரும்பத்தக்க தகுதி
தேசிய இதழ்களில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதியது, மாநாடு, கருத்தரங்குகளில் கட்டுரைகள் சமர்ப்பித்தது, கல்வி நிறுவனங்களில் நிர்வாகத்தில் ஏற்பட்ட அனுபவம், ஆய்வாளர்களுக்கு வழிகாட்டிய அனுபவம், பன்னாட்டு அமைப்புகளில் உறுப்பினர் பொறுப்புடன், அயல் மொழி ஒன்றிலாவது தேர்ச்சி பெற்ற தகுதி.
இந்த தகுதிகளுடன், 55 வயதுக்குள் உள்ளோர், 2,000 ரூபாய் வரைவோலையுடன், இயக்குனர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாவது முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்ப பயிலகம், தரமணி, சென்னை 113 என்ற முகவரிக்கு, ஜூன் 16க்குள் விண்ணப்பிக்கலாம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!