Load Image
Advertisement

தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7ல் திறப்பு

திருச்சி: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றப்பட்டுள்ளது. 1 முதல் 12ம் வகுப்புகள் வரை ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்என பள்ளிகல்வித்துறை அமைச்சர் மகேஷ் கூறியுள்ளார்.
கடந்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள், ஏப்., 28ல் முடிந்து, ஒரு மாதம் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சியில் நிருபர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 7 ம் தேதி திறக்கப்படும். கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement