மருத்துவ மாணவர் சேர்க்கை: மத்திய அரசுக்கு எதிர்ப்பு
சென்னை: நாடு முழுதும் உள்ள இளநிலை, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான 100 சதவீத இடங்களுக்கும் சேர்த்து, எம்.சி.சி.,யே கவுன்சிலிங் நடத்தும் என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், மருத்துவ மாணவர் சேர்க்கையில், மாநில அரசுகளின் இடஒதுக்கீடு மற்றும் உள்ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படும் என்றும், புதிய நடைமுறையை அமல்படுத்த, மாநில அரசுகள் தங்களின் இடஒதுக்கீட்டு விதிகளை சமர்ப்பிக்குமாறும், மாநில அரசுகளின் சார்பில் ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய சுகாதாரத் துறை செயலருக்கு, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களை, எம்.சி.சி., நடத்துவதற்கு அனுமதிக்க முடியாது; தமிழக மருத்துவ கல்வி இயக்கம் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது
வாசகர் கருத்து (1)
உங்கள் கையில் அதிகாரம் கொடுத்தால், நீங்கள் கோடிகளில் உருளுவீர்கள். மத்திய அரசு , மாநில அரசுடன் இணைந்து தான் இந்த தேர்வை நடத்த போகிறது. ஏன் குழப்பம்? ஜாலரா போட்டு போட்டு சிங் ... ஜிங் சக் போட தான் லாயக்கு