Load Image
Advertisement

சட்டப் படிப்புகள்

படிப்பு: பி.ஏ.எல்எல்.பி., - 5 ஆண்டுகள்
கல்வி நிறுவனங்கள்:சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி - புதுப்பாக்கம் மற்றும் பட்டரை பெரும்புதூர்.
அரசு சட்டக் கல்லூரிகள் - மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், தர்மபுரி, ராமநாதபுரம், சேலம், காரைக்குடி, நாமக்கல் மற்றும் தேனி.

தனியார் சட்டக் கல்லூரிகள்: சரஸ்வதி சட்டக்கல்லூரி - திண்டிவனம், மதர் தெரசா சட்டக்கல்லூரி - புதுக்கோட்டை, கே.எம்.சி., சட்டக்கல்லூரி - திருப்பூர், ஈரோடு சட்டக்கல்லூரி, ஜி.டி.என்., சட்டக்கல்லூரி - திண்டுக்கல், எஸ். தங்கப்பழம் சட்டக்கல்லூரி - தென்காசி, துளசி மகளிர் சட்டக்கல்லூரி - தூத்துக்குடி மற்றும் முகில் சட்டக்கல்லூரி - கன்யாகுமரி
5 ஆண்டு ஹானர்ஸ் படிப்புகள்:பி.ஏ.எல்எல்.பி., -ஹானர்ஸ்பி.காம்.எல்எல்.பி., - ஹானர்ஸ்பி.பி.ஏ.எல்எல்.பி., - ஹானர்ஸ்பி.சி.ஏ.எல்எல்.பி., - ஹானர்ஸ்
கல்வி நிறுவனம்: சீர்மிகு சட்டப்பள்ளி - சென்னை, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்.
தகுதிகள்: ஹானர்ஸ் சட்டப் படிப்புகளுக்கு 12ம் வகுப்பில் குறைந்தது 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
பி.ஏ.எல்எல்.பி., படிப்பில் சேர்க்கை பெற குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். வயது வரம்பு இல்லை. மேலும் அரசு விதிமுறைப்படி, இன வாரியான இட ஒதுக்கீடு மற்றும் சிறப்பு இட ஒதுக்கீடும் உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: https://emsecure.in/tnlaw23/ எனும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விபரங்களுக்கு: www.tndalu.ac.in

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement