Load Image
Advertisement

இன்ஜி., கவுன்சிலிங் சேர்க்கை 4 ஆண்டு கட் - ஆப் வெளியீடு

சென்னை: இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களின் வசதிக்காக, நான்கு ஆண்டுகளுக்கான, கட் ஆப் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவுக்கு, வரும், 4ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. கவுன்சிலிங் ஜூலை, 2ல் துவங்க உள்ளது.

இந்நிலையில், கவுன்சிலிங்குக்கு முன் மாணவர்கள், தங்களுக்கான கல்லுாரி மற்றும் கட் - ஆப் மதிப்பெண் குறித்து, உத்தேசவிபரங்களை தெரிந்து கொள்ள, 2019ம் ஆண்டு முதல், நான்கு ஆண்டுகளுக்கான பழைய, கட் ஆப் விபரங்களை கவுன்சிலிங் குழு வெளியிட்டுள்ளது.
இந்த விபரங்கள், www.tneaonline.org என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. மாணவர்கள் இந்த பட்டியலை பார்த்து, தங்களின் மதிப்பெண்ணுக்கு ஏற்ற கல்லுாரிகள் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என, கவுன்சிலிங் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement