ஆரம்ப கல்விக்கு முக்கியத்துவம்; தாம்பரம் மாநகராட்சி முதல் பட்ஜெட் தாக்கல்
தாம்பரம் மாநகராட்சிக்கான முதல் பட்ஜெட், நேற்று நடந்த மாநகராட்சி சாதாரண கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி தாக்கல் செய்தார்.
பட்ஜெட் தாக்கல் குறித்து, கவுன்சிலர்கள், நிருபர்களுக்கு கூட தெரிவிக்காமல், அவசர அவசரமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில், 2023 - 24ம் ஆண்டிற்கான வருவாய், 702 கோடி ரூபாய், செலவு 671 கோடி ரூபாயாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் பட்ஜெட் என்பதால் ஆரம்ப கல்வி, அரசு துறை கட்டுமானம் மற்றும் திட்டங்கள், குப்பை மேலாண்மை, பாதாள சாக்கடை திட்டம், வளர்ச்சி பணிகள், மின் துறை ஆகியவற்றுக்கு மட்டுமே நிதி தரப்பட்டுள்ளது. ஆரம்ப கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களுக்கு தலா ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு வார்டுக்கும், வார்டு மேம்பாட்டு நிதியாக, மூன்று லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!