Load Image
Advertisement

தமிழ் சுவடியியல் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில், கல்வி உதவித் தொகையுடன், தமிழ் சுவடியியல் மற்றும் பதிப்பியல் ஓராண்டு பட்டயப் படிப்பில் சேர, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தமிழ் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயப் படிப்பு, 2013ல் துவக்கப்பட்டது.

இதை படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்த, தேர்வு அடிப்படையில், ஆண்டுதோறும் 10 மாணவர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் உதவித் தொகை, தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான எழுத்து தேர்வு, ஏப்., 12ல் நடக்க உள்ளது.
இப்பட்டயப் படிப்புக்கான விண்ணப்பத்தை, www.ulakaththamizh.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதில் சேர, குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு கிடையாது.
சேர்க்கை கட்டணம் 3,100 ரூபாய். ஏப்., 5 விண்ணப்பிக்க கடைசி நாள். மேலும் விபரங்களுக்கு, 044 - 2254 2992 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement