Load Image
Advertisement

வேறு பல்கலைக்கு மாறிய மாணவர்களுக்கு ரீபண்ட்

புதுடில்லி: ஒரு பல்கலையில் படிக்க கிடைத்த சீட் ரத்து செய்த அல்லது வேறு பல்கலைக்கு மாற்ற லாகி சென்ற மாணவர்களுக்கு, அவர்கள் செலுத்திய தொகையை திருப்பி அளிப்பதற்காக, 30 கோடி ரூபாயை, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு வசூலித்துள்ளது.
யு.ஜி.சி., தலைவர் எம். ஜகதீஷ் குமார் நேற்று அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

சில காரணங்களால் ஒரு பல்கலையில் இடம் கிடைத்தும், அதில் சேராமல் ரத்து செய்த அல்லது வேறு பல்கலைக்கு மாற்றல் வாங்கிச் சென்ற மாணவர்களுக்கு முந்தைய பல்கலைகள் மற்றும் கல்லுாரிகள் வசூலித்த முழு கட்டணத்தை திரும்பத் தர வேண்டும்.
நடப்பு கல்வியாண்டில், 2022 அக்., 31 வரை வாங்கிய முழுத் தொகையையும் மாணவர்களுக்கு செலுத்த உத்தரவிடப்பட்டது. ஆனால் சில கல்லுாரிகள், பல்கலைகள், நிகர்நிலைப் பல்கலைகள் இந்தத் தொகையை திருப்பித் தராமல் இருந்தன. இது தொடர்பாக மாணவர்களிடம் இருந்து அதிகளவில் புகார்கள் வந்துள்ளன. சிலர் நீதிமன்றங்களையும் நாடியுள்ளனர்.
இதையடுத்து, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளிடமிருந்து அந்தத் தொகையை வசூலிக்கும் நடவடிக்கையில், யு.ஜி.சி., ஈடுபட்டுள்ளது. புதுடில்லி பல்கலை இந்த வகையில் மற்ற பல்கலைகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது. அந்தப் பல்கலை, 13 ஆயிரத்து 611 மாணவர்களுக்கு, 16.95 கோடி ரூபாய் கட்டணத்தை திருப்பி தந்துள்ளது.
இதைத் தவிர, மற்ற பல்கலைகளிடம் இருந்து, 12.14 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு, 832 மாணவர்களுக்கு திருப்பி தரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement