திருச்சியில், மக்களை தேடி குறைதீர் முகாமில் பங்கேற்ற அவர் நேற்று கூறியதாவது:
இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் எண்ணிக்கையை வெளிப்படையாக அறிவித்தோம். கொரோனா காலத்தில், 10ம் வகுப்பு படித்த மாணவர்கள் அனைவருக்கும் முழு தேர்ச்சி வழங்கப்பட்டது.
பொதுத்தேர்வு எழுத வராத பல மாணவர்கள், தொழிற்பயிற்சி பள்ளிகளிலும், பாலிடெக்னிக் கல்லுாரிகளிலும் படித்து வருவது தெரியவந்துள்ளது. கடந்த கல்வியாண்டில், இடை நிற்றல் என கண்டறியப்பட்ட, 1.88 லட்சம் மாணவர்களை கண்டுபிடித்து, அவர்களை பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் சராசரியாக, 32 ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத முன் வருவதில்லை. கடந்த கல்வியாண்டில், தேர்வு எழுத வராத, 52 ஆயிரம் மாணவர்களை, கடந்த ஜூனில் தேர்வு எழுத வைத்துள்ளோம். தற்போது பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களையும், வரும் ஜூன் இறுதியில், உடனடி தேர்வில் பங்கேற்க வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
கல்வியில் பின் தங்கிய 15 மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு, நன்னடத்தை வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. அதில், 1.25 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். நன்னடத்தை வகுப்பு நடத்த ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்தோம். வரும் கல்வி ஆண்டில், அந்த திட்டத்தை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!