ராணுவ கல்லுாரியில் அட்மிஷன்
சென்னை: உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில், இந்திய ராணுவ கல்லுாரி செயல்படுகிறது. ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்கள், எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலும், அதன் பின் உயர்கல்வியிலும், ராணுவ கல்லுாரியில் சேர்க்கப்படுகின்றனர்.
இங்கு படித்து முடிக்கும் மாணவர்கள், இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில், உயர் அதிகாரிகளாக நியமிக்கப்படுவர். 2024ம் ஆண்டுக்கான ராணுவ கல்லுாரி சேர்க்கைக்கு நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிக்கையை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. நுழைவு தேர்வுக்கான விண்ணப்பத்தை, www.rimc.gov.in என்ற இணையதளத்தின் வழியே, ஏப்., 15 மாலை 5:45 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
ஏழாம் வகுப்பு படிப்பவர்கள் மற்றும் ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர் மற்றும் மாணவியர், இந்த நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஜூன் 3ம் தேதி நுழைவு தேர்வு நடக்கும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!