ஆசிரியர்கள் விடுப்புக்கு தனி செயலி அறிமுகம்
சென்னை: அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க, புதிய செயலி வசதியை, பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது.
தமிழகத்தில், 35 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 2 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
அவர்கள் விடுப்பு கோரி விண்ணப்பிக்க, தனி செயலியை, பள்ளிக் கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய செயலியை, ஆசிரியர்கள் தங்கள் மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்து, அதன் வாயிலாக விடுப்புக்கு பதிவு செய்யலாம். தலைமை ஆசிரியர்கள் கணினியின் வாயிலாக, அதை சரிபார்த்து, விடுப்புக்கு ஒப்புதல் அளிப்பார்.
ஆசிரியர்கள் விடுப்புக்கான TN-SED Schools App என்ற புது செயலி வாயிலாக, ஆசிரியர்களுக்கு மீதம் இருக்கும் விடுமுறை நாட்கள், மருத்துவ விடுப்பு நாட்கள், சாதாரண விடுப்பு நாட்கள் உள்ளிட்ட விபரங்களை தெரிந்து கொள்ள முடியும் என, பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!