9.79 லட்சம் பணியிடங்கள் காலி!
ரயில்வேயில் 2.93 லட்சம், பாதுகாப்பு சிவில் பிரிவில் 2.64 லட்சம் மற்றும் உள்துறையில் 1.43 லட்சம் உட்பட மத்திய அரசில் 78 அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 9.79 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன என்று ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்டது.
பா.ஜ.க., எம்.பி., சுஷில் மோடியின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், &'10 லட்சம் இளைஞர்களுக்கு ஆதாயமான சேவை வாய்ப்புகளை வழங்குவதோடு, வேலை வாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான ‘ரோஸ்கர் மேளா’ திட்டம் செயல்படும். தேசிய ஆட்சேர்ப்பு நிறுவனம் ஒன்று அமைக்கப்பட்டு, சிறந்த நடைமுறைகளை கடைப்பிடிப்பதற்காக, மத்திய மற்றும் மாநிலங்களில் உள்ள பணியாளர் தேர்வு முறைகள் குறித்து விரிவான ஆய்வு செய்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் குறிப்பிட்டுள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!