கொரோனா தொற்றுநோய் பல நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தியது. பராமரிப்பு செலவு கணிசமாக குறைந்ததால் பல நிறுவனங்கள் இந்த போக்கை தொடர்ந்தன.
ஆனால், இத்தகைய நடவடிக்கையால் அனைத்து ஊழியர்களும் மகிழ்ச்சியாக இல்லை’ என்று இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட ஐ.ஐ.டி., சென்னை மற்றும் ஐ.ஐ.எம்., அமிர்தசரஸ் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் இருந்து வேலை செய்வது ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் இருவருக்கும், குறிப்பாக திருமணமானவர்களுக்கு நம்பமுடியாத அளவு மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. தொற்றுநோய் தொடர்பான பயம், வேலை பாதுகாப்பின்மை உட்பட பல சிக்கல்கள்களுக்கும் வழிவகுத்துள்ளது.
வேலைக்கும் வீட்டிற்கும் இடையிலான எல்லை உடைப்பை சமாளிப்பதற்கும், அவற்றிலிருந்து மற்றொன்றை எதிர்மறையாக பாதிக்காமல் தடுப்பதற்கும் சிக்கல் மையப்படுத்தப்பட்ட சமாளிக்கும் யுக்தி’ அவசியம் என்று அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தேடல், திட்டமிடல் மற்றும் சிக்கலைத் தீர்க்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் தனிநபர்கள் இந்த சவால்களை சமாளிக்கலாம் என்றும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!