செக் குடியரசின் கல்வி, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம், ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகை திட்டத்தில் இந்திய மாணவர்களும் அந்நாட்டு தூதரகம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
யார் விண்ணப்பிக்கலாம்:
செக் குடியரசின் பொது கல்வி நிறுவனங்களில், இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு அல்லது ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள விரும்பும் இந்திய மாணவர்கள் இந்த உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி மொழி: பயிற்சியின் முதன்மை மொழி செக். உதவித்தொகை பெறுபவர்கள் சில ஆங்கில படிப்புகளிலும் அனுமதிக்கப்படலாம்.
உதவித்தொகை விபரம்:
* செக் கல்வி நிறுவனங்களில் 2 மாதங்கள் முதல் 10 மாதங்கள் வரை கல்வி அல்லது ஆராய்ச்சி மேற்கொள்ளும் வாய்ப்பை பெற முடியும். அதற்கான கல்விக்கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை.
* பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மாதம் சுமார் 33,000 ரூபாயும், முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு சுமார் 35,000 ரூபாயும் வழங்கப்படுகிறது.
* இவைதவிர, தள்ளுபடி கட்டணத்தில் தங்குமிடம் மற்றும் மூன்று நேரமும் உணவு வழங்கப்படுகிறது.
தேவையான ஆவணங்கள்:
* கல்வி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட அழைப்புக் கடிதம்
* மாணவரது கல்வி விபரம்
* கல்வி மேற்பார்வையாளர்களிடமிருந்து பெறப்பட்ட இரண்டு பரிந்துரை கடிதங்கள்
* கல்வி சான்று நகழ்கள்
* பாஸ்போர்ட் நகல்
* கலைத்துறை சார்ந்த மாணவர்கள் கலைப் பணியின் மாதிரி புகைப்படங்கள், இசை நிகழ்ச்சியின் வீடியோ/ஆடியோ பதிவு போன்றவை.
விண்ணப்பிக்கும் முறை: குறிப்பிடப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் மாணவர்கள் நேரடியாக தொடர்பு கொண்டு மாணவர் சேர்க்கைக்கான அழைப்பு கடிதத்தை பெற வேண்டும். தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செக் குடியரசின் தூதரகம், 50-எம், நிதி மார்க், சாணக்யபுரி, புதுடில்லி -110021 என்ற முகவரிக்கு அஞ்சல் செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 15
விபரங்களுக்கு: www.education.gov.in, www.mzv.cz/newdelhi/en மற்றும் www.msmt.cz
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!