Load Image
Advertisement

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 இரண்டு கட்டங்களாக தேர்வு

சிவகங்கை: சிவகங்கையில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் 2022 க்கான ஆசிரியர் தகுதித்தேர்வுதாள் 2 கணினி வழியில் இரண்டு கட்டங்களாக நடக்கவுள்ளது.

முதல் கட்டமாக பிப்., 3 முதல் 8 ம் தேதி வரையும், பிப்., 10 முதல் 14 வரை இரண்டாம் கட்டமாகவும் காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரையும், மதியம் 2:00 முதல் மாலை 5:00 மணி வரையும் நடக்கவுள்ளது.

திருமாஞ்சோலை, பாண்டியன் சரஸ்வதி யாதவா பொறியியல் கல்லுாரியிலும், காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லுாரியிலும், காரைக்குடியில் அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லுாரி ஆகிய 3 தேர்வு மையங்களில்நடக்கிறது.
தேர்வு நடை பெறும் நாளில் தேர்வு எழுதுபவர்கள் காலை 7:30 மணிக்கும் மாலையில் தேர்வு எழுதுபவர்கள் மதியம் 12:30 மணிக்குள்ளும் தேர்வு மையம் வர வேண்டும். காலை 8:15 க்கு பின்னரும், மதியம் 1:15 க்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள், என கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement