தமிழக பள்ளிக்கல்வித்துறை 2022- 23ம் கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதன்படி, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3 வரையிலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், செய்முறை தேர்வு மற்றும் தேர்வு முடிவுகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் 6 முதல் 10ம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், முன்கூட்டியே நடத்த முடிவு செய்துள்ளோம். அதன்படி, மார்ச் 1 முதல் 9ம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெறும்.
பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் ஜன.,30, 31 மற்றும் பிப்ரவரி 1ம் தேதிகளில் தனித் தேர்வர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம். அதன்படி, பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 5ம் தேதியும், பிளஸ்-1 தேர்வு முடிவுகள் மே 19ம் தேதியும், 10ம் வகுப்பிற்கு மே 17ம் தேதியும் முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!