குஜராத்தில் வினாத்தாள் கசிவு; போட்டி தேர்வு ஒத்தி வைப்பு
ஆமதாபாத்: குஜராத்தில், அரசு போட்டித் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததால், நேற்று அத்தேர்வு நிறுத்தப்பட்டு, ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலம் முழுதும் நேற்று இளநிலை எழுத்தர் பதவிக்கான போட்டித் தேர்வு நடைபெற இருந்தது.
இந்த தேர்வில், 1,181 பதவி இடங்களுக்கு 9.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்காக மாநிலம் முழுதும் 2,995 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், தேர்வு துவங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன், வினாத்தாள் கசிந்துள்ளது தெரியவந்தது. இதனால் தேர்வு நிறுத்தப்பட்டு, ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.
வாசகர் கருத்து (1)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
குஜராத்தில் இன்னும் என்ன நடக்க வேண்டும் . எல்லாம் நிகழ்ந்துவிட்டது.