Load Image
Advertisement

பயிற்சியும் முயற்சியும் தொடர்ச்சியாக இருக்கும் போது வெற்றி கிடைக்கும்: பூமிநாதன்

மதுரை: &'&'நம்முடைய பயிற்சியும் முயற்சியும் தொடர்ச்சியாக இருக்கும் போது வெற்றி கிடைக்கும். மகிழ்ச்சி கிடைக்கும்&'&' என மதுரையில் தினமலர் சார்பில் நடந்த &'நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.,&' நிகழ்ச்சியில் கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமி இயக்குநர் எம்.பூமிநாதன் பேசினார்.
மதுரையில் &'தினமலர்&' நாளிதழ், கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமி இணைந்து நடத்தும் &'நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.,&' வழிகாட்டி நிகழ்ச்சி ஜன., 22ல் மாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது.

ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதி சாதிக்க துடிப்போருக்கும், தற்போது கல்லுாரியில் படிக்கும் &'ஐ.ஏ.எஸ்., கனவு&' மாணவர்களுக்கும் சரியாக வழிகாட்டவும், . மத்திய அரசின் யு.பி.எஸ்.சி., தமிழக அரசின் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் சாதிக்கவும் உதவ நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமி இயக்குநர் எம்.பூமிநாதன் பேசியதாவது:
யுபிஎஸ்சி தேர்வில் விருப்ப பாடத்தில், கல்லூரியில் படித்த பாடத்தை படிக்கலாம். இலலையென்றால் அவர்கள் பட்டியல் கொடுப்பார்கள். அதில், நமக்கு விருப்பப்பட்டபாடத்தை தேர்வு செய்து கொள்ளலாம். கடந்த சில வருடங்களில் தமிழகத்தில் இருந்து 30 சதவீத வெற்றி வாய்ப்பு குறைந்துவிட்டது.
வெற்றி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 3 சதவீதம் மட்டுமே ஆகும். இதற்கு முக்கிய காரணம், பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. மாநில தேர்வுகளில் கவனம் செலுத்துகின்றனர். ஒரே முயற்சியில் தேர்வாக வேண்டும். பெற்றோர் ஆதரவு குறைவு. திறமையானவர்கள் வெளிநாட்டிற்கு சென்று விட்டனர்.
குழந்தைகளை பணம் சம்பாதிக்கும் மெஷினாக பெற்றோர்கள் மாற்றிவிட்டனர். பிடிக்காவிட்டாலும், குழந்தைகளை பொறியியல், நீட் எழுத கட்டாயப்படுத்துகின்றனர். எத்தனை பெற்றோர், யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராக வேண்டும் என குழந்தைகளை ஊக்குவிக்கின்றனர்.
டிகிரி படித்து முடித்த பிறகு, வேலை கிடைக்காவிட்டால், இதனை முயன்று பார்க்கலாம் என யுபிஎஸ்சி தேர்வுக்கு எழுதுகின்றனர். வட மாநிலங்களில், கல்லூரி முதலாண்டிலேயே படிக்கின்றனர். பாடத்திட்டத்திலும் சிவில் சர்வீஸ் தேர்வை கொண்டு வந்து , ஒவ்வொரு செமஸ்டரிலும் படிக்கின்றனர்.
தமிழக சமச்சீர் வரலாற்று புத்தகத்தை அனைத்து மாநிலங்களிலும் யுபிஎஸ்சி தேர்வுக்கு படிக்கிறார்கள். தினசரி நாளிதழ்களை தினமும் படிக்க வேண்டும். நமது பாடத்திட்டத்தை நியாபகம் வைத்து, நாளிதழ்களில் வரும் அது குறித்து என்ன செய்தி வந்துள்ளது அதை பார்த்து படிக்க வேண்டும். நாளிதழ்களில் படிக்கும் போது, பல தரப்பு மக்கள், நிபுணர்களின் கருத்து கிடைக்கும்.
யுபிஎஸ்சி தேர்வு என்பது &'ஒப்பினியன் &' அடிப்படையில் நடக்கும் தேர்வு. அதில், &'வாட், விச், ஹவ், வேர்&' இப்படி தேர்வு இருக்காது. &'தட் இஸ், வாட் யுவர் ஒப்பினியன், அனலைஸ், கம்பேர், டிப்ரன்சியேட்&' இதுபோல தான் அனைத்து கேள்விகளும் இருக்கும். இதற்கு தலையங்கம், நாளிதழ்களை தவிர வேறு ரிசோர்ஸ் எதுவும் கிடையாது. நாளிதழ்களை படிக்கும்போது செய்தியை நடுநிலையோடு படிக்க வேண்டும். உங்களுக்கு என எந்தவிதமான &'ஐடியாலஜி&'யும் இருக்கக்கூடாது. அது நேர்முக தேர்விலும், தேர்விலும் பயன்படும்.
பாடங்களை படிக்கும் போது குறிப்பு எடுத்து படிக்க வேண்டும். பாடங்கள் வாரியாக படிப்பதை விட தலைப்பு வாரியாக படிக்க வேண்டும். தமிழகத்தில் ஒரு லட்சம் பேர் எழுதும் போது 40 சதவீதம் வெற்றி பெற முடியும். நாடு முழுவதும் 10 லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர் என்றால், 6.5 லட்சம் பேர் தேர்வு எழுத வருகின்றனர். 20 - 30 ஆயிரம் பேர் உண்மையாக படிக்கின்றனர்.
ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தால் 3 ஆயிரம் பேரை நேர்முக தேர்வுக்கு அழைப்பார்கள். 13-14 ஆயிரம் பேரை மெயின் தேர்வு கூப்பிடுவார்கள். 5 லட்சம் பேர் எழுதினால், 2.5 லட்சம் பேர் முறையாக தயாராகாமல் தேர்வுக்கு வருகின்றனர். ஒரு லட்சம் பேர் தேர்வு எழுதும் போது, பழைய வரலாற்றை பெறலாம். தமிழகத்தை தலை நிமிர செய்யலாம். பதில் எழுதும் போது அறிமுகம், முடிவு அவசியம். கேள்விதாளை படித்து புரிந்து கொள்வது அவசியம். அதனை, மேலோட்டமாக படிக்க கூடாது. கவனமாக படித்து கவனமாக புரிந்துகொள்ள வேண்டும்.
தேர்வுக்கு, நல்ல தகவல்களை சேகரிக்க வேண்டும். முறையாக தயாராக வேண்டும். சரியான முறையில் &'பிரசன்டேசன்&' முக்கியம். நம்முடைய பயிற்சியும் முயற்சியும் தொடர்ச்சியாக இருக்கும் போது வெற்றி கிடைக்கும். மகிழ்ச்சி கிடைக்கும். இதன் மூலம் தினமலர் நடத்திய நிகழ்ச்சிக்கு அர்த்தம் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement