சிறை அலுவலர் தேர்வு தள்ளிவைப்பு
சென்னை: சிறை அலுவலர் பணிக்கான தேர்வு, டிச.,22ல் இருந்து, 26ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., செயலர் உமா மகேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக சிறைத்துறை அலுவலர் பதவிக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், வரும், 22ம் தேதி எழுத்து மற்றும் கணினி வழி தேர்வு நடத்தப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த தேர்வு டிச.,26க்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் முற்பகல் மற்றும் பிற்பகலில், கணினி வழி தேர்வாக நடைபெறும்.
சென்னை, கோவை, தர்மபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், ராமநாதபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலுார், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், துாத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்துர், வேலுார், விருதுநகர், அரியலுார், செங்கல்பட்டு ஆகிய, 24 மையங்களில் தேர்வு நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!