மேலாண்மை படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான நுழைவுத்தேர்வுகளில் குறிப்பிடத்தக்க ஒன்று மேட்’ எனும் மேனேஜ்மெண்ட் ஆப்டிடியூட் டெஸ்ட்’.
அறிமுகம்:
கடந்த 1988ம் ஆண்டு முதல் இத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அப்போதைய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2003ல் இத்தேர்வை தேசிய அளவிலான தேர்வாக அங்கீகரித்தது. இந்தியா முழுவதும் உள்ள 600க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் மேலாண்மை படிப்புகளில் இத்தேர்வு மதிப்பெண் வாயிலாக மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை: காகிதவழி, கணினி வழி என மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு முறைகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 5
விபரங்களுக்கு: https://registration.mat.aima.in
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!