மருத்துவ கவுன்சில் தேர்தல் மின்னணு முறையில் நடக்குமா
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை மின்னணு முறையில் நடத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டாக்டர் கார்த்திகேயன் என்பவர் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலில் முதல் கட்டமாக டிச., 19ல் தபால் ஓட்டுப் பதிவு நடக்கிறது. தபால் ஓட்டு, முறைகேடுகளுக்கு வழிவகுக்கிறது. கடந்த 2020ல் மின்னணு பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டது.
ஒரு முறை பயன்படுத்தும், பாஸ்வேர்டு எண் வாயிலாக மின்னணு முறையில் ஓட்டுப் பதிவு நடைமுறையை அமல்படுத்த முடியும். இதனால், தேர்தலை நேர்மையாக நடத்த முடியும். எனவே, பாஸ்வேர்டு வாயிலாக, மின்னணு முறையில் ஓட்டுப் பதிவு நடத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசு மருத்துவ கவுன்சில் தேசிய மருத்துவ கமிஷன் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டு விசாரணையை டிச.,5க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!