தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் தொடர வேண்டும்
வேலுார்: மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு தொடர வேண்டும், என, தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஜனார்த்தனன் கூறினார்.
இதுகுறித்து, வேலுாரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தற்போது நடைமுறையில் உள்ள தொழிற்கல்வி பாடங்களை, அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் தொடர வேண்டும்.வேளாண் அறிவியல் கணக்கு பதிவியல், தணிக்கை இயல், வீட்டு மின் சாதனங்கள், பொது இயந்திரவியல், மின்னணுவியல், ஆடை வடிவமைத்தலும் தயாரித்தலும், நர்சிங் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் ஏதாவது, 2 தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை பள்ளிகளில் அறிமுகப்படுத்த வேண்டும்.
தற்போதுள்ள தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறும்போது, அப்பாடப்பிரிவுகளை மூடும் நிலை உள்ளது. இந்த நிலை நீடித்தால் இன்னும், 5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் அனைத்து தொழிற்கல்வி பாடப்பிரிவுகளையும் மூடும் நிலை ஏற்படும். எனவே, தொழிற்கல்வி ஆசிரியர்களை, புதிதாக நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!