Load Image
Advertisement

போணியாகாத குறும்படம் பார்க்க ரூ.5.5 கோடி வசூலா?: ஆசிரியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு

மதுரை: மதுரையில் போணி ஆகாத குறும்படத்தை பள்ளிகளில் திரையிட மாணவர்களிடம் தலா ரூ.10 வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மதுரையின் அனைத்துப் பள்ளிகளிலும் குழந்தைகளின் ஓட்டப்பந்தய வீராங்கனை என்ற குறும்படத்தை நவம்பர் முதல் மார்ச் வரை திரையிடவும், இதற்காக மாணவர்களிடம் தலா ரூ.10 கட்டணம் வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதில் குறும்படம் திரையிட அனுமதி பெற்றவர்கள் புரொஜெக்டருடன் பள்ளிக்கு வருவர். அனைத்து மாணவர்களையும் ஒரே இடத்தில் அமர வைப்பது உள்ளிட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாடியோவ்... ரூ. ஐந்தரை கோடி

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

படத்தின் பெயரை இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. அரசு பள்ளிகளில் 1.60 லட்சம், உதவி பெறும் பள்ளிகளில் 1.40 லட்சம், மெட்ரிக், சி.பி.எஸ்.இ.,யில் 2.40 லட்சம் என ஐந்தரை லட்சத்திற்கும் மேல் மாணவர்கள் உள்ளனர். அவர்களிடம் தலா ரூ.10 கட்டணமாக வசூலித்தால் ரூ.ஐந்தரை கோடியை தாண்டிவிடும். பெயர் தெரியாத படத்திற்கு இவ்வளவு பெருந்தொகையை ஏன் வசூலிக்க வேண்டும்.

எமிஸில் ஆன்லைன் வருகை பதிவு, ஹைடெக் ஆய்வகம், ஆன்லைனின் வகுப்புகள் என தொழில்நுட்பத்தை புகுத்தும் கல்வித்துறை, இப்படத்தை சாதாரண பென் டிரைவரிலோ அல்லது பள்ளியின் இ மெயிலுக்கோ அனுப்பி இலவசமாகவே திரையிட நடவடிக்கை எடுத்தால் ரூ. சில நுாறுகளில் செலவு முடிந்துவிடும். மாணவரிடம் வசூலிப்பது ஆசிரியர்களுக்கு பெரும் சவாலான விஷயம். அரசு இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும், என்றனர்.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement