சென்னை: இன்ஜினியரிங் படிப்பில் 20 ஆண்டுகள் அரியர் உள்ளவர்கள் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பை அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி. மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ.யின் விதிகளின்படி படிப்பு காலம் முடிந்து அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரையில் மட்டுமே அரியர் பாடங்களுக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியும்.
ஆனால் இந்த அவகாசத்தைத் தாண்டியவர்களிடம் கூடுதல் அபராத தொகையை வசூலித்து தமிழக பல்கலைகள் தரப்பில் செமஸ்டர் எழுத கூடுதல் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில் அண்ணா பல்கலை தேர்வுத் துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இன்ஜினியரிங் கல்லுாரிகளில் 2001 - 2002ம் ஆண்டில் மூன்றாம் செமஸ்டர் படித்தவர்கள் மற்றும் 2002 -2003ம் கல்வி ஆண்டில் முதல் செமஸ்டர் தேர்வு படித்தவர்கள் முதல் கடந்த ஆண்டு வரை படித்தவர்கள் தேர்ச்சி பெறாத அரியர் பாடங்கள் இருந்தால் டிசம்பர் மாத தேர்வில் பங்கேற்கலாம் என அறிவித்துள்ளது.
இதற்காக 5000 ரூபாய் சிறப்பு கட்டணத்துடன் ஒவ்வொரு பாடத்துக்குமான தேர்வுக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இதற்கான பதிவு coe1.annauniv.edu/ என்ற இணையதளத்தில் துவங்கியுள்ளது. டிசம்பர் 3 வரை விண்ணப்பிக்கலாம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!