Load Image
dinamalar telegram
Advertisement

இதர மொழிகளில் மருத்துவ படிப்பு நல்லதா?

இந்தியில் மருத்துவக் கல்வியை வழங்குவதற்கான மத்தியப் பிரதேச அரசின் முடிவு, கிராமப்புற மாணவர்களுக்கு ஆரம்பத்தில் உதவக்கூடும். ஆனால், அவர்களின் வளர்ச்சி மற்றும் தொடர் அறிவுக்கான தேடல் கடுமையாக பாதிக்கப்படலாம் என மருத்துவர்கள் கருதுகின்றனர்.

இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசியத் தலைவர் டாக்டர் ஜே. ஏ. ஜெயலால், ’’நவீன மருத்துவம் உலகளாவிய மருத்துவம். இது இந்தியாவில் மட்டுமல்ல. உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது. ஒரு பிராந்திய மொழியில் பயிற்சி பெற்றால், மேற்கொண்டு படிக்கவும், புதுப்பிக்கவும் வெளிநாடுகளுக்கு செல்வதை எதிர்பார்க்க முடியாது.

பாடப்புத்தகங்கள் வாயிலாக மட்டும் மருத்துவக் கல்வியை கற்பிக்க முடியாது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சர்வதேச ஆய்வுக் கட்டுரைகள், இதழ்கள் மற்றும் கட்டுரைகளையும் அடிக்கடி படிக்க வேண்டும். ஒரு உள்ளூர் சமூக மட்டத்தில் மட்டும் இருக்கும்பட்சத்தில் பரவாயில்லை. மாறாக, உலகளாவிய சமூகத்துடன் தொடர்பு கொள்ளும்பட்சத்தில் அது கடினமாக அமையலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement