டி.இ.ஓ., பதவி உயர்வு பட்டியல் வெளியீடு
சென்னை: பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் டி.இ.ஓ.,க்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்குவதற்கான, பணி மூப்பு பட்டியலை, பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறையில், நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பணி மூப்பு அடிப்படையில், மாவட்ட கல்வி அலுவலர் என்ற டி.இ.ஓ., பதவி உயர்வு வழங்கப்படுகிறது. டி.இ.ஓ.,க்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் என்ற, சி.இ.ஓ., பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
இதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் காலியாக உள்ள, முதன்மை கல்வி அலுவலர்களான சி.இ.ஓ., காலியிடங்களுக்கு, பதவி உயர்வு வழங்குவதற்கான, பணி மூப்பு பட்டியலை, பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதில், 146 டி.இ.ஓ.,க்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் முன்னுரிமைப்படி, சுய விருப்பம் மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில், பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.-
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!