தேசிய திறனறி தேர்வில் வெற்றி மாணவர்களுக்கு பாராட்டு பதாகை
ஆர்.கே.பேட்டை: அரசு நடுநிலை பள்ளி மாணவர்கள் நடப்பு கல்வியாண்டில், தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நுழைவாயிலில் பாராட்டு பதாகை வைக்கப்பட்டு உள்ளது. ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சந்திரவிலாசபுரம் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள், 11 பேர் நடப்பு கல்வியாண்டு தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.இவர்களுக்கு. பள்ளி நுழைவாயிலில் பாராட்டு பதாகை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பள்ளியை சேர்ந்த மாணவர்கள். 2013ம் ஆண்டு முதல், இதுவரை 54 பேர் தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!