ஜே.இ.இ., நுழைவுத் தேர்வில் 820 மாணவர்கள் முறைகேடு
புதுடில்லி: ஜே.இ.இ., மெயின் தேர்வு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ரஷ்ய &'ஹேக்கரிடம்&' நடத்தப்பட்ட விசாரணையில், 820 மாணவர்களுக்காக தேர்வில் முறைகேடு செய்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழிநுட்ப கல்வி நிறுவனம் உட்பட, நாட்டின் முன்னிலை கல்வி மையங்களில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.கைதுகடந்த ஆண்டு செப்டம்பரில், &'ஆன்லைன்&' வாயிலாக நடந்த ஜே.இ.இ., பிரதான தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஹரியானாவின் சோன்பாட் என்ற இடத்தில் உள்ள தேர்வு மையத்தில், கணினிகள், &'ஹேக்&' செய்யப்பட்டு, வேறொரு இடத்தில் இருந்து இந்த தேர்வை சிலர் எழுதியதாக தெரிய வந்தது. 20 மாணவர்களுக்காக இந்த முறைகேடு நடந்ததாக முதலில் கூறப்பட்டது. அவர்கள் அனைவரும் மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டது.இந்த விவகாரம் தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த முறைகேட்டில் சில வெளிநாட்டினர் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, ரஷ்யாவைச் சேர்ந்த மிகெய்ல் ஷார்கின், 25, என்ற &'ஹேக்கர்&' எனப்படும் இணைய ஊடுருவல்காரரை சி.பி.ஐ., தேடி வந்தது. அதிர்ச்சிஇந்நிலையில், மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் இருந்து மிகெய்ல் ஷார்கின் நேற்று முன் தினம் புதுடில்லி வந்திறங்கினார். அவரை விமான நிலையத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்நிலையில், டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அவர் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை இரண்டு நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஜே.இ.இ., பிரதான தேர்வில், 820 மாணவர்களுக்காக மிகெய்ல் முறைகேடு செய்தது விசாரணையில் தெரியவந்தது. நினைத்ததை விட எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஜே.இ.இ., தேர்வுகள், &'ஐலியோன்&' என்ற மென்பொருள் வாயிலாக நடத்தப்படுகிறது. இந்த மென்பொருளை, &'டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்&' நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த மென்பொருளில் ஊடுருவி, வேறொரு இடத்தில் இருந்து தேர்வு எழுதப்பட்டு மோசடி அரங்கேறி உள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!