Load Image
Advertisement

தினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம்: சென்னையில் அக்., 5ல் நடக்கிறது

சென்னை: தினமலர் நாளிதழ் சார்பில் இளந்தளிர்களின் பிஞ்சு விரல் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பித்து வைக்கும், அனா, ஆவன்னா அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி, அக்., 5ம் தேதி சென்னையில் வடபழநி, பெரம்பூர், தாம்பரத்தில் நடைபெற உள்ளது.
விஜயதசமி திருநாள் அக்., 5ம் தேதி வருகிறது. அன்று வித்யாரம்பத்துக்கு உகந்த நாள். எனவே அன்று, தினமலர் நாளிதழ் சார்பில், இளந்தளிர்களின் பிஞ்சு விரல் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பித்து வைக்கும், அனா, ஆவன்னா அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி, சென்னையில் வடபழநி, பெரம்பூர், தாம்பரம் ஆகிய மூன்று இடங்களில் நடக்கின்றன.

இதில் கல்வியாளர்கள், ஐ.பி.எஸ்., அதிகாரிகள், கலைத்துறை வித்தகர்கள், புகழ்பெற்ற டாக்டர்கள், ஆடிட்டர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, இளந்தளிர்களின் பிஞ்சு விரல் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பித்து வைக்கின்றனர்.காலை 8:30 மணி முதல் 10:30 மணி வரை நடக்கும் நிகழ்ச்சியில், மூன்றரை வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பங்கேற்கலாம்.
அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியில், உங்கள் வீட்டு குழந்தைகளை பங்கேற்க வைத்து கல்வி கோவிலுக்குள் அடியெடுத்து வைக்க அனைவரும் வாருங்கள். அனுமதி இலவசம்; முன்பதிவு அவசியம்.குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முழு முகவரி, மொபைல் போன் ஆகிய விபரங்களை தாங்கள் பங்கேற்க விரும்பும் பகுதிக்கு என குறிப்பிடப்பட்டு உள்ள மொபைல் எண்ணுக்கு, வாட்ஸ் ஆப் அனுப்பி, பதிவு செய்ய வேண்டும்.
அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும். இந்நிகழ்ச்சியை தினமலர் நாளிதழுடன் இணைந்து எவர்வின் கல்வி குழுமம் நடத்துகிறது.
எந்தெந்த இடங்கள்?
வடபழநி: அருள்மிகு வடபழநி ஆண்டவர் கோவில், வடபழநி, சென்னை - 26 / 99443 09681
பெரம்பூர்: எவர்வின் வித்யாஷ்ரம், 32/ 134 பெரம்பூர் நெடுஞ்சாலை, பெரம்பூர், சென்னை - 12 / 98843 91342
தாம்பரம்: ஸ்ரீசங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி, 39, வேளச்சேரி மெயின் ரோடு, சென்னை - 59/ 97511 36644.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement