Load Image
dinamalar telegram
Advertisement

வேளாண் பட்டயப் படிப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்

புதுச்சேரி: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் தவளக்குப்பத்தில் உள்ள புதுச்சேரி வேளாண் அறிவியல் கல்லூரியுடன் இணைந்து, வேளாண் பட்டயக் கல்விக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
புதுச்சேரி வேளாண் அறிவியல் கல்லூரி, முழுநேர இரண்டு வருட வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டயப் படிப்பினை கடந்த 5 ஆண்டுகளாக நடத்தி வருகின்றது.

மேலும், மூன்று ஆண்டுகள் நடத்திட, அண்ணாமலை பல்கலைக் கழக துணைவேந்தர் கதிரேசன் தலைமையில் பல்கலைக் கழக பதிவாளர் டாக்டர் சீத்தாராமன், வேளாண் அறிவியில் கல்லூரி தலைவர் கணேஷ் கையெழுத்திட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டனர். அண்ணாமலை பல்கலைக் கழக பேராசிரியர் கருப்பையா, வேளாண் புலமுதல்வர் அங்கயற்கண்ணி ஆகியோர் உடனிருந்தனர்.
வேளாண் அறிவியில் கல்லூரி தலைவர் கணேஷ் கூறுகையில், வேளாண் பட்டயப் படிப்பு முடித்தவர்கள் தமிழ்நாடு குரூப் தேர்வு மூலம் உதவி வேளாண் அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களில் தகுதியான வேலையில் சேரலாம்.
பட்டயப் படிப்பு முடித்தவர்கள் மத்திய அரசின் வேளாண் தொழில் முனைவோர் பயிற்சியில் கலந்து கொண்டு ரூ. 20 லட்சம் வரை மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற முடியும் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement