Load Image
dinamalar telegram
Advertisement

தனியார் கல்லுாரிகளில் பி.எட்., சேர்க்கை

சென்னை: தனியார் கல்வியியல் கல்லுாரிகளில் பி.எட்., மாணவர் சேர்க்கை நடத்த, தமிழக கல்வியியல் பல்கலை அனுமதி அளித்துள்ளது.
ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கீழ் செயல்படும், 21 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., சேர்க்கைக்கு, தமிழக அரசின் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்குக்கு, tngasaedu.in என்ற இணையதளத்தில், 25ம் தேதி விண்ணப்ப பதிவு துவங்கியது.

அக்., 3 வரை பதிவு செய்ய அவகாசம் உள்ளது.அக்., 6ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, அக்., 12 முதல், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படும் என, கல்லுாரி கல்வி இயக்குனரகம் அறிவித்து உள்ளது.
இந்நிலையில், 650க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., மாணவர் சேர்க்கையை துவங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அரசு கவுன்சிலிங் முடிந்த, 15 நாட்களுக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என்று, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement