Load Image
dinamalar telegram
Advertisement

கல்விக்கான நிதி போதாது!

கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக்கு போதுமான நிதி ஒதுக்கிட கோரி முன்னணி உயர்கல்வி நிறுவனங்களின் சுமார் 500 ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொல்கத்தாவில் பேரணி நடத்தினர்.
நவீன கால பாடத்திட்டத்தில், அறிவியலுக்கு புறம்பான நம்பிக்கைகளை பரப்புவதை நிறுத்துவதற்கும், ஆதாரம் சார்ந்த அறிவியலின் அடிப்படையில் கொள்கைகளை வகுக்க அரசை வலியுறுத்தியும் இந்த பேரணி நடத்தப்பட்டது.

ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், பிரசிடென்சி பல்கலைக்கழகம், கல்கத்தா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உட்பட பேரணியில் கலந்துகொண்டவர்கள், அறிவியல் மனப்பான்மையை வளர்த்து, அறிவியலுக்குப் புறம்பான நம்பிக்கைகளைப் பரப்புவதை நிறுத்தவும் வலியுறுத்தினர்.
’கல்விக்கான நிதியானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. மேலும் அறிவியல் ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.8 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது’ என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement