Load Image
dinamalar telegram
Advertisement

அரசு கல்லூரிகளில் நன்கொடையா? பெற்றோர், மாணவர்கள் அதிர்ச்சி!

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், புதிய மாணவர் சேர்க்கைக்கு நன் கொடை வசூலிக்கக் கூடாது என, கல்லுாரி நிர்வாகங்களை எச்சரிக்குமாறு, உயர்கல்வித் துறைக்கு, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை, அந்தந்த கல்லுாரிகளால் நடத்தப்படுகிறது.

இதற்கான விண்ணப்பங்களை மட்டும், கல்லுாரி கல்வி இயக்குனரகம், ஆன்லைன் வழியில் பெற்றுள்ளது. இந்த விண்ணப்பங்களை, கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கை கமிட்டி பரிசீலனை செய்து, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிட வேண்டும்.
பின், தரவரிசையின்படி, மாணவர்களுக்கான பாட பிரிவுகள் ஒதுக்க வேண்டும்.இதில், 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை தவறாமல் பின்பற்ற வேண்டும்; மதம் மற்றும் மொழி சிறுபான்மை கல்லுாரிகள், அதற்கான இட ஒதுக்கீட்டு விதிகளை பின்பற்ற வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், சில அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை சேர்க்கைக்கு இடம் வாங்கி தருவதாகக் கூறி, இடைத்தரகர்கள் சிலர், மாணவர்களின் பெற்றோரிடம் நன்கொடை வசூலிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
பெற்றோர், ஆசிரியர் குழு, முன்னாள் மாணவர்கள் குழு, மாணவர், ஆசிரியர் ஒருங்கிணைப்பு குழு என்ற பெயர்களில், இந்த வசூல்வேட்டை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, உயர்கல்வி துறை விசாரணை நடத்தி, நன்கொடை வசூலிப்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement