5 ஆண்டு இளநிலை சட்டப் படிப்புகள்:பி.ஏ.எல்எல்.பி., -ஹானர்ஸ்பி.காம்.எல்எல்.பி., - ஹானர்ஸ்பி.பி.ஏ.எல்எல்.பி., - ஹானர்ஸ்பி.சி.ஏ.எல்எல்.பி., - ஹானர்ஸ்பி.ஏ.எல்எல்.பி.,
3 ஆண்டு இளநிலை சட்டப் படிப்புகள்:எல்.எல்.பி., - ஹானர்ஸ்எல்.எல்.பி.,
முதுநிலை சட்டப்படிப்பு:எல்.எல்.எம்.,
கல்வி நிறுவனங்கள்:சென்னையில் உள்ள சட்ட பல்கலைக்கழக வளாகத்தில் செயல்படும் சீர்மிகு சட்ட கல்லூரியில் ஹானர்ஸ் படிப்புகளும், பல்கலைக்கழக இணைப்பு பெற்ற சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி - புதுப்பாக்கம் மற்றும் மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், தர்மபுரி, ராமநாதபுரம், சேலம்,காரைக்குடி, நாமக்கல், தேனி ஆகிய நகரங்களில் செயல்படும் அரசு சட்டக்கல்லூரிகள், தனியார் கல்லூரிகளான, சரஸ்வதி சட்டக்கல்லூரி - திண்டிவனம் மற்றும் மத்திய சட்டக்கல்லூரி - சேலம் ஆகியவற்றில் வழக்கமான சட்டப்படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
தகுதிகள்:ஹானர்ஸ் படிப்புகளுக்கு 12ம் வகுப்பில் குறைந்தது 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். பி.ஏ.எல்எல்.பி., படிப்பில் சேர்க்கை பெற குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். வயது வரம்பு இல்லை.
இளநிலை பட்டப்படிப்பு மதிப்பெண் அடிப்படையில் மூன்று ஆண்டுகள் கொண்ட சட்டப்படிப்புகளில் சேர்க்கை நடத்தப்படுகிறது. இளநிலை சட்டப்படிப்பு மதிப்பெண் அடிப்படையில் எல்.எல்.எம்., சேர்க்கை நடைபெறுகிறது. மேலும் விதிமுறைப்படி, இன வாரியான இட ஒதுக்கீடு மற்றும் சிறப்பு இட ஒதுக்கீடும் உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விபரங்களுக்கு: www.tndalu.ac.in
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!