கலை அறிவியல் கல்லுாரி ஜூலை 18ல் திறப்பு
சென்னை: தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், ஜூலை 18ல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லுாரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. தனியார் கல்லுாரிகளில் நேரடியாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, 163 கல்லுாரிகளில் சேர்க்கைக்கு, tngasa.in என்ற இணைய தளம் வழியே விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. 2.24 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில், 1.75 லட்சம் பேர் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளனர்.
ஜூலை 7க்குள் பதிவு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் பிளஸ் 2 தேர்வு முடிவுக்கு பின், கூடுதலாக ஐந்து நாட்கள் விண்ணப்பிக்க, அவகாசம் அளிக்கப்பட உள்ளது. அதன் பின், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளதாக, உயர் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு விடுமுறை முடிந்து, ஜூலை 18ல் வகுப்புகள் துவக்கப்படும் என, உயர் கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கி, எட்டு நாட்களான நிலையில், 91 ஆயிரத்து 834 பேர் பதிவு செய்துள்ளனர்.
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!