பிளஸ் 1 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 7ம் தேதி வெளியிடப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், முன்கூட்டியே விடை திருத்த பணிகள் முடிந்து விட்டன. இதைத் தொடர்ந்து, பிளஸ் 1 பொது தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது.
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில், தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி, மதிப்பெண்களை பார்க்கலாம்.
மாணவர்கள் பள்ளியில் பதிவு செய்த மொபைல் போன் எண்ணுக்கும் பிளஸ் 1 மதிப்பெண்கள் அனுப்பப்படும். மாவட்ட, மைய மற்றும் கிளை நுாலகங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலக தேசிய தகவலியல் மையங்களிலும் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகளில் மாணவிகள் 94.99 சதவீதம் பேரும், மாணவர்கள் 84.86 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13 சதவீதம் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அளவில் அதிக தேர்ச்சி விகிதத்தை (95.56 சதவீதம்) கொண்ட மாவட்டங்களில் பெரம்பலூர் முதலிடத்தில் உள்ளது.
அடுத்த இடங்களில் விருதுநகர் (95.44 சதவீதம்), மதுரை (95.25 சதவீதம்) மாவட்டங்கள் உள்ளன. தேர்வு எழுதிய 8.3 லட்சம் மாணவர்களில் 7.59 லட்சம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்; 41,376 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!