டி.என்.பி.எஸ்.சி., போட்டிதேர்வு முடிவு அறிவிப்பு
சென்னை: டி.என்.பி.எஸ்.சி., யின் இரண்டு போட்டி தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
குரூப் - 7ஏ பணியில் அடங்கிய செயல் அலுவலர் நிலை -- 1 பதவியில் 25 காலியிடங்கள்; கூட்டுறவு தணிக்கை துறையில் உதவி இயக்குனர் பதவியில் எட்டு காலியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில், தேர்வு செய்யப் பட்டவர்களுக்கு, வரும் 29ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.
இதற்கான விபரங்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!