இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பி.இ., பிடெக், பி.ஆர்க்., படிப்புகளுக்கான கட்டணம் ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சமாக ரூ.79,600ம் அதிகபட்சமாக ரூ.1,89,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., படிப்புகளுக்கான கட்டணம் குறைந்தபட்சமாக ரூ.1,41,200ம் அதிகபட்சமாக ரூ.3.34 லட்சமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
3 ஆண்டு எம்.சி.ஏ., படிப்புகளுக்கான கட்டணம் குறைந்தபட்சமாக ரூ.88,500 எனவும் அதிகபட்சமாக ரூ.1,94,100 எனவும், 2 ஆண்டு எம்.பி.ஏ., படிப்புகளுக்கான கட்டணம் குறைந்தபட்சமாக ரூ.85,000 ஆகவும், அதிகபட்சமாக ரூ. 1,95,200 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உதவி பேராசிரியர்களுக்கான சம்பளம் ரூ.1,34,189 ஆகவும், பேராசிரியர்களுக்கான சம்பளம் ரூ.2,60,379 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்த பட்சம், அதிகபட்ச கட்டணத்தை தங்களுக்குள்ளே நிர்ணயித்து கொள்ளலாம்.
பாலிடெக்னிக்கில் கற்பிக்கப்படும் டிப்ளமோ படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சமாக ரூ.67,900 எனவும், அதிகபட்சமாக ரூ.1,40,900 ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!