மாநகராட்சி பள்ளி மாணவிகள் நீட் தேர்வில் சாதனை
மதுரை: மதுரை மாநகராட்சி பள்ளி மாணவிகள் 8பேர் உட்பட அரசு பள்ளி மாணவிகள் 17 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.
மதுரை மாவட்ட கல்வி துறை நீட் ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா தேவி கூறியதாவது:
மதுரை அவ்வை மாநகராட்சி பள்ளி மாணவிகள் தீபாஸ்ரீக்கு புதுக்கோட்டை, பிரியங்காவுக்கு மதுரை, வினோதினிக்கு விருதுநகர் அரசு மருத்துவ கல்லுாரி, சங்கீதாவுக்கு மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லுாரி, கவுசல்யாவுக்கு மதுரை சி.எஸ்.ஐ., பல் மருத்துவ கல்லுாரி, ஈ.வி.ஆர்.என். மாநகராட்சி பள்ளி மாணவிகள் ஆஷிகா ராணிக்கு சென்னை மருத்துவ கல்லுாரி, நான்சிக்கு நெல்லை அரசு மருத்துவ கல்லுாரி, ராதிகாவுக்கு மதுரை அரசு மருத்துவ கல்லுாரிகளில் இடம் கிடைத்துள்ளது.
மதுரை சர்க்கரை ஆலை பள்ளி மாணவி கோகிலவாணி, எழுமலை அரசு பள்ளி மாணவர் ஹரிஷ் குமாருக்கு மதுரை அரசு மருத்துவ கல்லுாரி, மேலுார் அரசு பெண்கள் பள்ளி இலக்கியாவுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லுாரி, சோழவந்தான் அரசு பள்ளி சங்கீதாவுக்கு கோவை கே.எம்.சி.எச்., இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த், விக்கிரமங்கலம் அரசு பள்ளி தங்கபேச்சிக்கு கன்னியாகுமரி ஸ்ரீ முகாம்பிகை இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸில் இடம் கிடைத்துள்ளது.
மேலுார் அரசு பள்ளி யாழினிக்கு சென்னை மாதா மருத்துவ கல்லுாரி, பேரையூர் அரசு பள்ளி புவனேஸ்வரிக்கு திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லுாரி, பூசலபுரம் அரசு பள்ளி மாணவர் அலெக்ஸ் பாண்டிக்கு கூடலுார் அரசு பல் மருத்துவக்கல்லுாரி, செக்காணுாரணி அரசு பள்ளி புவனேஸ்வரிக்கு குன்றத்துார் மாதா பல் மருத்துவ கல்லுாரிகளில் இடம் கிடைத்துள்ளது என்றார்.
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி கல்லணை மகளிர் மேல் நிலைப் பள்ளி மாணவிகள் ஞாழினி, இசக்கியம்மாள், நட்சத்திர பிரியா ஆகியோர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கும் காயத்ரி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கும், சவுந்தர்யா கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிக்கும், கிருத்திகா கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லுாரிக்கும், அப்ரின் பாத்திமா கோவை தனியார் பல் மருத்துவக் கல்லுாரிக்கும் தேர்வாகியுள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!