Load Image
Advertisement

இந்து தர்ம படிப்பு!

நாட்டிலேயே முதல் முறையாக, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இந்து தர்மத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பு துவங்கப்பட்டுள்ளது.
இந்து தர்மத்தின் அறியப்படாத பல அம்சங்களை உலகுக்குத் தெரியப்படுத்தவும், அதன் போதனைகளை மக்களிடம் கொண்டு செல்லவும் இந்த படிப்பு உதவும் என்று பனாரஸ் இந்து பல்கலைக்கழக தாளாளர் சுக்லா தெரித்துள்ளார்.

இந்த இரண்டு ஆண்டு படிப்பு நான்கு செமஸ்டர்கள் மற்றும் 16 தாள்கள் கொண்டதாக இருக்கும். பாரத் அத்யாயன் கேந்திரா கலை பீடத்தின் தத்துவம் மற்றும் மதம், சமஸ்கிருதம் மற்றும் பண்டைய இந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொல்லியல் ஆகிய துறைகளுடன் இணைந்து இப்படிப்பு வழங்கப்படுகிறது.
ஒரு வெளிநாட்டு மாணவர் உட்பட நாற்பத்தைந்து மாணவர்கள் இப்படிப்பில் சேர்க்கை பெற்றுள்ளனர் என்று பாரத் அத்யாயன் கேந்திராவின் ஒருங்கிணைப்பாளர் சதாசிவ் குமார் திவேதி தெரிவித்தார்.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement