முதுநிலை மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி., பிரிவினருக்கு 27 சதவீதம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
8 லட்சம் ரூபாய்
இதை எதிர்த்து பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில், இந்த இடஒதுக்கீடுகளை 2021 - 2022 கல்வியாண்டிலேயே வழங்க அனுமதி அளித்தது. பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான வருவாய் உச்சவரம்பை இந்த கல்வியாண்டு மட்டும் 8 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்க அனுமதி அளித்திருந்தது.
இந்த வழக்கில் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா அமர்வு பிறப்பித்த உத்தரவு:
தகுதி என்பது சமூக, பொருளாதார பின்னணியையும் மதிப்பதாக இருக்க வேண்டும். பின்தங்கியுள்ளோருக்கு தீர்வாக இருப்பதால் இடஒதுக்கீடு தொடர வேண்டும். இடஒதுக்கீடு என்பது தகுதிக்கு தடையாக இருப்பதாக கூற முடியாது.
அதே நேரத்தில் சமூக நீதியை பரவலாக்குகிறது.கொரோனாவால் ஏற்கனவே மாணவர் சேர்க்கைக்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது.அதனால் இந்த விஷயத்தில் மேலும் இழுபறி ஏற்படுவதை நீதிமன்றம் விரும்பவில்லை.
விரிவான விசாரணை
ஓ.பி.சி., பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் அரசின் முடிவு, சட்டத்துக்குட்பட்டே எடுக்கப்பட்டு உள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான வருவாய் உச்ச வரம்பு தொடர்பாக விரிவான விசாரணை, மார்ச் மூன்றாவது வாரத்தில் துவங்கும். கடந்த 7ம் தேதி அளித்த உத்தரவின் படி இந்த இரண்டு இடஒதுக்கீட்டையும் 2021 - 2022 கல்வியாண்டில் கடைப்பிடிக்கலாம். இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.
மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!