வணிகவியல் பயிலகங்களுக்கு அனுமதி வழங்க கோரிக்கை
சென்னை: மாணவர்கள் நலன் கருதி, வணிகவியல் கல்வி பயிலகங்கள் மீதான தடையை தளர்த்த வேண்டும் என, தமிழக தட்டெழுத்து, சுருக்கெழுத்து, கணினிப் பள்ளிகள் சங்கம், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத் தலைவர் சோமசங்கர், முதல்வர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு:
தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், அடுத்த மாதம் வணிகவியல் கல்வித் தேர்வு நடத்த உள்ளது. இதில் பங்கேற்கும் மாணவர்கள் பயிற்சி பெற, வணிகவியல் கல்வி பயிலகங்கள் செயல்பட, அனுமதி அளிக்க வேண்டும்.
தேர்வுக்கு செல்ல உள்ள மாணவர்கள் அனைவருக்கும், கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.தட்டெழுத்து, சுருக்கெழுத்து தேர்வுகள் எழுத, தொடர் பயிற்சி தேவை. எனவே, இரண்டு லட்சம் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, வணிகவியல் கல்வி பயிலகங்கள் செயல்பட, அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!