dinamalar telegram
Advertisement

ரயில்வே தேர்வு: நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை புதுப்பிக்க வாய்ப்பு

Share

மதுரை: ரயில்வே பணியாளர் தேர்வில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை புதுப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ரயில்வே துறையில் பொறியியல், இயந்திரவியல், மின்சாரம், தொலைதொடர்பு, மருத்துவமனை, பணிமனை ஆகிய பிரிவுகளில் உதவியாளர், ரயில் பாதை பராமரிப்பு பணியாளர் போன்ற பணிகளுக்கு 2019 பிப்., 23 வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. விண்ணப்பங்கள் சிலவற்றில் தவறுதலாக போட்டோ, கையெழுத்து இருந்ததால் நிராகரிக்கப்பட்டன.
அந்த விண்ணப்பங்களை அனுப்பிய விண்ணப்பதாரர்களுக்கு தற்போது மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ ரயில்வே தேர்வாணைய இணையதளங்களில் டிச.,15 முதல் மாறுதலுக்கான ஒரு இணையதள இணைப்பு வழங்கப்படவுள்ளது. அதை பயன்படுத்தி தங்களது சரியான போட்டோ, கையெழுத்து பதிவு செய்யலாம்.
விண்ணப்பம் ஏற்கப்பட்டதா என அறிய ரயில்வே தேர்வு ஆணைய இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதியை குறிப்பிட்டு அறியலாம். ஏற்கப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை. ரயில்வே தேர்வாணைய தேர்வு முழுவதும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.
தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். எனவே அதிகார பூர்வமற்ற இடைத்தரகர்களை அணுகி ஏமாற வேண்டாம். ரயில்வே தேர்வு குறித்து சமூக வலைதளங்கில் வரும் அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை நம்ப வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement