dinamalar telegram
Advertisement

பாலிடெக்னிக் பணி அறிவிப்பாணை ரத்து கோரிய வழக்கில் அரசு பதில் தர உத்தரவு

Share

சென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிகளுக்காக, 2019ல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் பதில் அளிக்க, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரத்தைச் சேர்ந்த சிவராமன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு, இன்று துவங்கி வரும் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. அதற்கான ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு, பத்தாம் வகுப்பு மற்றும்பிளஸ் 2 வகுப்பில், தமிழ் மொழிப் பாடமாக படித்து, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அவ்வாறு தமிழ் படிக்காதவர்கள், அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில், பணி கிடைத்த இரண்டு ஆண்டுகளுக்குள், தமிழ் மொழிப் பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும், விதிகள் வகுக்கப்பட்டு உள்ளன.
அரசு பணியிடங்களில், 100 சதவீதம் தமிழர்களையே நியமிக்கும் வகையில், டிசம்பர் 1ல் புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இன்று துவங்கும் தேர்வில், தமிழ் தெரியாத வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள், அதிகளவில் விண்ணப்பித்து உள்ளனர். எனவே, 2019ல் பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டது.
இந்த மனு, நீதிபதி பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்குமாறு, தமிழக அரசு, ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும், 21க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement