dinamalar telegram
Advertisement

பட்டமேற்படிப்பு மையத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Share

புதுச்சேரி: காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தின் தமிழ்த் துறையில் படித்த முதல் அணி மாணவர்கள், 32 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்து, கலந்துரையாடி மகிழ்ந்தனர்.
லாஸ்பேட்டையில், புதுச்சேரி அரசு சார்பில், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம் 1988ம் ஆண்டு துவங்கப்பட்டது.இந்த மையத்தின் தமிழ்த்துறையில், முதல் அணியில் முதுகலை படிப்பில் சேர்ந்த மாணவர்கள் 12 பேர், 32 ஆண்டு களுக்கு பின் நேற்று சந்தித்தனர்.
தமிழ்த்துறை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, துறைத் தலைவர் அவ்வை நிர்மலா தலைமை தாங்கினார்.புதுச்சேரி அரசின் சட்டத் துறை மொழிபெயர்ப்பாளரும், தமிழ்த் துறையின் முன்னாள் மாணவருமான சுந்தர முருகன் வாழ்த்திப் பேசினார்.
முன்னாள் மாணவர்கள், தங்களின் கல்லுாரி நினைவுகளைப் பகிர்ந்து, மகிழ்ந்தனர். ஆண்டுதோறும் சந்தித்து, தமிழ்த்துறைக்கு உதவி செய்ய உறுதி எடுத்துக் கொண்டனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement