Load Image
dinamalar telegram
Advertisement

அரையாண்டு பாடங்களை விரைந்து முடிக்க அறிவுரை

சென்னை: கன மழைக்கு இடைவெளி கிடைத்துள்ள நிலையில், அரையாண்டு தேர்வுக்கான பாடங்களை விரைந்து முடிக்குமாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமாக பெய்த நிலையில், மாநிலம் முழுதும் கன மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் மழையால், குடியிருப்பு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, பல மாவட்டங்களில் நேற்று வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

சென்னையில் நேற்று வழக்கம் போல் பள்ளிகள் இயங்கின. ஆனால், சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. சென்னையில் வெள்ளம் குறையாத பகுதிகளில் மட்டும், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து, விடுமுறை அறிவித்தனர்.
இதற்கிடையே கன மழை ஓய்ந்துள்ளதால், பல மாவட்டங்களில் மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. எனவே, பள்ளிகளில் அரையாண்டு தேர்வுக்கான பாடங்களை விரைந்து முடிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்களான சி.இ.ஓ.,க்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
தீபாவளிக்கு பின், பள்ளிகளுக்கு அதிக நாட்கள் விடுமுறை அளித்ததால், ஏராளமான பாடங்கள் நடத்தப்படாமல் நிலுவையில் உள்ளன. இந்த பாடங்களை நடத்தி முடிக்கும் வகையில், ஞாயிறு தவிர சனிக்கிழமை உட்பட அனைத்து வார நாட்களும் பள்ளிகளுக்கு வேலை நாள் என சி.இ.ஓ.,க்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இன்னும் மூன்று வாரங்களில் அரையாண்டு தேர்வு வரும் நிலையில், அதற்கான பாடங்களை பாக்கி இல்லாமல் நடத்தி முடிக்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement