Load Image
Advertisement

பள்ளி கட்டமைப்பு மேம்படுத்த நிதியுதவி புதிய செயலி அறிமுகம்

பெங்களூரு: பள்ளி கட்டமைப்பு மேம்படுத்த நிதியுதவி செய்வோர் பெயர், கட்டடங்களுக்கு வைப்பதை மீண்டும் மாநில அரசு கொண்டு வருகிறது. இதற்காக புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த நிதியுதவி அளிக்கும் தன்னார்வலர்களை பெருமைப்படுத்தும் வகையில் கட்டடங்களுக்கு தன்னார்வலர்களின் பெயர்வைக்கும் திட்டம் 2011ல் கொண்டு வரப்பட்டது.

தற்போது இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்தும் வகையில், பள்ளிக்கல்வி இணையதளத்தில் நம்ம சாலே நம்ம கொடுகே என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த செயலி மூலம் தன்னார்வலர்கள், நிதியுதவி தேவைப்படும் பள்ளிகளின் விபரங்கள் மற்றும் தேவைகளை பட்டியலிட்டுள்ளது. கட்டமைப்பு பணிகள் எந்த அளவு நிறைவடைந்து உள்ளது என்பதும் பதிவிடப்பட்டுள்ளது. இந்த செயலி இன்னும் முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை.
பள்ளிக்கல்வித்துறை கமிஷனர் விஷால் கூறியதாவது:
ஒவ்வொரு பள்ளிக்கும் 50 ஆயிரம் ரூபாய் என செலவிடுவது சவாலான ஒன்று. அதனால் தான் இந்த ஏற்பாட்டை அரசு செய்துள்ளது. தன்னார்வலர்கள் மூலம் நிதியுதவி பெறும் போது சுமை குறையும். இவ்வாறு கூறினார்.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement