பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டது. ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டது.
எந்த அடிப்படையில் இந்த அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டது என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கேள்வி எழுப்பியது. இதையடுத்து இடஒதுக்கீட்டுக்கான அளவுகோலை மறு பரிசீலனை செய்ய மத்திய அரசு ஒப்புக் கொண்டது.
இந்நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான அளவுகோல்களை மறுபரிசீலனை செய்ய மூன்று பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய சமூக நீதித்துறை நேற்று அறிவித்தது.
இந்த குழு பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினரைக் கண்டறிவதற்காக நாட்டில் இதுவரை பின்பற்றப்பட்ட பல்வேறு அணுகுமுறைகளையும் ஆய்வு செய்யும். மேலும் எதிர்காலத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரை அடையாளம் காண பின்பற்றப்பட வேண்டிய அளவுகோல்களை பரிந்துரைக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் முன்னாள் நிதித்துறை செயலர் அஜய் பூஷண் பாண்டே, இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் உறுப்பு செயலர் வி.கே.மல்கோத்ரா, மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சய் சன்யால் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்த கமிட்டி மூன்று வாரங்களில் தங்கள் பரிந்துரையை சமர்ப்பிக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடஒதுக்கீட்டுக்கான அளவுகோல் நிர்ணயிக்க குழு அமைத்தது அரசு
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!