dinamalar telegram
Advertisement

ஜப்பானிய மொழி பயில பல்கலையில் சேர்ந்தார் ஹரியானா முதல்வர்

Share

குருஷேத்ரா: குருஷேத்ரா பல்கலை நடத்தும் ஜப்பானிய கலாசாரம் மற்றும் மொழி குறித்த மூன்று மாத சான்றிதழ் படிப்பில் ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் சேர்ந்துள்ளார்.
ஹரியானாவில் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள தானேஷர் என்ற நகரில் அமைந்துள்ளது குருஷேத்ரா பல்கலைக் கழகம்.
மிகப் பழைமையான இந்தப் பல்கலையில் ஜப்பானிய கலாசாரம் மற்றும் மொழி என்ற ஆன்லைன் வாயிலாக பயிலும் மூன்று மாத சான்றிதழ் படிப்பு சமீபத்தில் துவக்கப்பட்டது. இதில் சேர வயது வரம்பு கிடையாது.
ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார், 67, முதல் மாணவராக இந்த படிப்பில் சேர்ந்துள்ளார்.
இதுகுறித்து மனோகர்லால் கட்டார், “வெளிநாட்டு மொழிகளை கற்பதில் எனக்கு ஆர்வம் உண்டு. எனவேதான் இந்த வகுப்பில் சேர்ந்துள்ளேன். கற்றுக் கொள்வதற்கு வயது வரம்பு எதுவும் கிடையாது,” என்றார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement